இரசாயனவியலுக்கான நோபல் பரிசு இரு பெண்களுக்கு
Share
இரு பெண்களுக்கு 2020 ஆம் ஆண்டின் இரசாயனவியலுக்கான நோபால் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் இம்மானுவேல் கார்ப்ரன்டியர் மற்றும் அமெரிக்காவின் ஜெனிஃபர் டௌட்னா ஆகியோருக்கே இவ்வாறு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
வெற்றியாளர்கள் 10 மில்லியன் ஸ்வீடிஸ் குரோனர் பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொள்வார்கள்.
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோனலின்ஸ்கா இன்ஸ்ட்டியூட்டில் உள்ள நோபல் பரிசுக் குழு இரசாயனவியலுக்கான நோபல் விருதை நேற்று முன்தினம் அறிவித்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் டோடுனா, ஜேர்மனியைச் சேர்ந்த இமானுல் சார்பென்டர் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் மேற்கொண்ட மரபணு மாற்றம் குறித்த ஆய்வுக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் இமானுல் சார்பென்டர், ஜெனிபர் டோடுனா ஆகிய இரு விஞ்ஞானிகளும் சேர்ந்து மரபணுத் தொழில்நுட்பத்தில் சிஏஎஸ்9 எனும் மரபணு மாற்றக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதைப் பயன்படுத்தி விலங்குகள், தாவரங்கள், நுன்ணுயிரிகள் ஆகியவற்றின் டிஎன்ஏக்களை மாற்ற முடியும்.
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் மிகப்பெரிய புரட்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். புற்றுநோய்க்குப் புதிய மருத்துவத்தையும், மருந்துகளையும் கண்டுபிடிக்க முடியும், நீண்டகாலமாக தீர்வு இல்லாத நோய்களையும் தீர்க்க உதவும்.