அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்துக்கு எகிறியது!
Share
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி கடந்த 24 மணி நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் சுமார் மூவாயிரம் பேர் மரணமடைந்தனர்.
கொரோனா வைரஸ் பாதிப் பானது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. உலகம் முழு வதும் இதுவரை 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டனர்.
உலகமெங்கும் கொரோனா வால் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்தனர்.
சீனாவை அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பானது ஐரோப்பிய நாடுகளை மையம் கொண்டு ள்ளது. இத்தாலியில் 24 மணி நேரத்தில் 919 பேர் உயிரிழந் தனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந் தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 23 ஆக அதிகரித்தது. இத்தாலியைத் தொடர்ந்து பல நாடுகளில் நேற்று முன்தினம் நூற்றுக் கணக்கானவர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர்.
ஸ்பெயினில் 65 ஆயிரத் திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகினர். அங்கு 24 மணி நேரத்தில் மட்டும் சிகிச்சை பலனின்றி 773 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு பலியா னோர் எண்ணிக்கை 5 ஆயிர த்து 138 ஆக உயர்ந்தது. பிரான் ஸிலும் 32 ஆயிரத்து 964 பேருக்கு வைரஸ் பரவியது.
24 மணி நேரத்தில் மட்டும் அந் நாட்டில் சிகிச்சை பலனின்றி 299 பேர் பலியாகினர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 995 ஆக அதிகரித்தது.
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்புக்கு 14 ஆயிரத்து 543 பேர் இலக்காகினர். 24 மணி நேரத்தில் மட்டும் 181 பேர் உயிரிழந்தனர். இதுவரை பலி யானோர் எண்ணிக்கை 759 ஆக உயர்ந்தது. இதனிடையே ஐரோப்பிய நாடுகளை விட அமெரிக்காவில் தற்போது வேகமாகப் பரவிவரும் கொ ரோனாவுக்கு 1,02,325 பேர் இலக்காகினர். 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக் காவில் 296 பேர் பலியாகினர்.
இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 591 என அதிகரித்தது.
இந்நிலையில் சராசரி அமெரி க்க குடும்பங்கள் மற்றும் வணிகங்களை கொரோனா பாதிப்பால் ஏற்படும் பொருளாதார கஷ்டங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2 ட்ரில்லியன் டொலர் அவசர செலவு மசோதா சட்டத்தில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.