Type to search

World News

அமெரிக்காவில் பலி எண்ணிக்கை உச்சத்தை எட்டும்

Share

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்த 2 வாரங்களில் பலி எண்ணிக்கை உச்சத்தை அடையலாம் என்று ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.

உயிர்க்கொல்லி வைரஸான கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து வல்லரசு நாடான அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் தான் அதிகம். இன்று காலை நிலவரப்படி அமெரி க்காவில் ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 70 பேருக்கு கொ ரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 24 84 பேர் உயிரிழந்தனர். 4500 இற்கும் மேற் பட்டோர் குணமடைந்து வீடு திரும்பினர்.

அமெரிக்காவில் நோய்த் தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடை பெற்றபோதிலும், கடந்த சில தினங்களாக புதிய நோயாளிகளின் வருகை அதிகரித்தது. இறப்பு விகிதமும் பெருமளவில் உயர்ந்து வருகிறது.

அடுத்த இரண்டு வாரங்களில் வைரஸ் தாக்கம் மற்றும் உயிரிழப்பு உச்சத்தை அடையலாம் என ஜனாதிபதி ட்ரம்ப் கவலை தெரிவித்தார்.

இது தொடர்பாக ட்ரம்ப் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் அடுத்த இரு வாரங்களில் பலி எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டும்.

உயிரிழப்பை ஒரு இலட்சத்திற்குள் கட்டுப்படுத்தினாலே பெரிய விடயம். வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். சமூக விலகல் உத்தரவு மேலும் ஒரு மாதத்திற்கு அதாவது, ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுகிறது.

ஜூன் முதலாம்; திகதிக்கு மேல் விடிவு பிறக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் போதுமான அளவு மேற்கொள்ளப்படவில்லை என் றால் பலி எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டும் என்று ஜனாதிபதியிடம் பொதுச்சுகாதார நிபுணர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link