Type to search

World News

அமெரிக்கப் போர்க்கப்பலில் கொரோனாவால் முதல் பலி

Share

குவாம் தீவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பலில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முதல் நபர் பலியாகினார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை புரட்டியெடுத்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 5 இலட்சத்துக்கும் அதிக மானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 23 ஆயிரம் பேருக்கு மேல் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தனர்.

இதற்கிடையில் அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட் என்ற விமானம் தாங்கிப் போர்க்கப்பலில் பணிபுரிந்து வரும் மாலுமிகளுக்கும் வைரஸ் பரவி யது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் 4 ஆயிரத்து 800 மாலுமிகளை கொண்ட அந்தப் போர்க்கப்பல் பிலிப்பைன்ஸ் அருகேயுள்ள குவாம் தீவின் ஆப்ரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து போர்க்கப்பலில் இருந்த மாலுமிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையில் சுமார் 600 மாலுமிகளுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையில், அணுசக்தி மூலம் இயங்கும் அந்தக் கப்பலில் மாலுமிகளுக்கு கொரோ னா தொற்று இருப்பது முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோதே கப்பலின் தலைமை அதிகாரி பிரட் குரோஷியர் அமெரிக்கக் கடற்படையின் தலைமை செயலாளர் (பொறுப்பு) தாமஸ் மோட்லி மற்றும் பாதுகாப்பு செயளாலர் மார்க் எஸ்பெர்க் ஆகியோருக்கு இந்த விவகாரம் குறித்த கடிதம் எழுதினார்.

இந்தக் கடித விபரங்கள் அமெரிக்க ஊடகங்களுக்குச் சென்றதால் இவ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

இதையடுத்து கடற்படையின் கட்டு ப்பாட்டை மீறியதாகவும் அரசை அவ மதித்ததாகவும் தேவையில்லாமல் பீதியை ஏற்படுத்தியதாகவும் கூறி யு.எஸ்.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட் கப்பலின் கப்டன் பிரட் குரோஷியரை அமெரிக்கக் கடற் படையின் செயலாளர் (பொறுப்பு) தோமஸ் மோட்லி பதவி நீக்கம் செய்தார்.

இந்தப் பதவி நீக்கம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இதை யடுத்து குரோஷியை பதவி நீக்கம் செய்த கடற்படைச் செயலாளர் தோமஸ் மோட்லி கடந்த 6ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இந்நிலையில், யு.எஸ்.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட் கப்பலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாலுமி ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

உயிரிழந்த மாலுமிக்கு கடந்த 30ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் குவாம் தீவிலுள்ள கடற்படைக்குச் சொந்தமான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகச்சை பெற்றுவந்தார்.

ஆனால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாலுமி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இது யு.எஸ்.எஸ். தியோடர் ரூஸ் வெல்ட் இராணுவ விமானம் தாங்கிப் போர் கப்பலில் கொரோனாவுக்கு ஏற்பட்ட முதல் உயிரிழப்பாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link