வடக்கில் 15 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண்கள் உட்பட 5 பேர் கைது
Share
வடக்கில் பல மாதங்களாக இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்தும் வங்கிகளில் வைப்புக்களில் இருப்பதுமாக சுமார் 50 பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளதோடு, இவர்களால் சுமார் 150 பவுண் வரையான நகைகள் கொள்ளையிடப் பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியை சேர்ந்த பிரதான சூத்திரதாரி, சுழிபுரம் பகுதியை சேர்ந்த இவருடைய மனைவி இவருடைய மருமகன் மற்றும் புதுக்குடி யிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் வசிக்கும் இவருடைய அக்கா அவருடைய மகன் ஆகியோரே இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர்களில் 3 ஆண்களும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் அவர்கள் கொள்ளையிடும் நகைகளை குறித்த இரு பெண்களும் முல்லைத்தீவு, புதுக்குடி யிருப்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்துவந்துள்ளதோடு கிளிநொச்சி மக்கள் வங்கி உள்ளிட்ட இடங்களில் அடகு வைத்துள்ளமை யும் தெரியவந்துள்ளது.
புதுக்குடியிருப்பில் அண்மையில் இடம் பெற்ற 8 கொள்ளை சம்பவங்களும் இவர் களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோம்பாவில் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் ஒன்றின் சி.சி.ரிவி காணொளி உதவியுடன் இந்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களால் புதுக்குடியிருப்பில் 8 கொள்ளைச் சம்பவங்களும் கிளிநொச்சியில் 3 கொள்ளை சம்பவங்களும் யாழ்ப்பாணத்தில் 2 கொள்ளை சம்பவங்களும் முல்லைத்தீவில் 2 கொள்ளை சம்பவங் களும் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.