53 இலட்சம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு
Share
கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் நேற்று சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மக்கள் வாழ்க்கையை சுமுகமாக பேணுவதற்கு அத்தியாவசிய சேவைகள், உணவுப் பொருள்கள், மருந்துப் பொருட்களை விநி யோகிக்கும் பொறிமுறை மற்றும் சிறப்புச் செயலணி நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டம் பற்றி அதன் தலைவரும் ஜனாதி பதியின் சிறப்புப் பிரதிநிதியுமான பசில் ராஜபக்ஷ விளக்கினார்.
நாட்டில் இனம்காணப்பட்ட 65 லட்சம் குடும்பங்களில் 53 லட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல் மாதம் 09ஆம் திகதிக்கு முன்னர் 5000 ரூபாய் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
வைரஸ் தொற்று பரவுவதை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டம் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்படக்கூடிய தடைகளை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
என்பது இருதரப்பினதும் கருத்தாகவிருந்தது.இந்நிகழ்ச்சித்திட்டம் அரசியல் சார்பற்றதாக இருக்க வேண்டும் என்பதிலும் இரு தரப்பினரும் உடன்பட்டனர்.