யாழிலிருந்த 2 ஆயிரம் பேர் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்
Share
யாழ்.மாவட்டத்துக்கு பல்வேறு தேவைகளுக்காக வருகை தந்து தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் இருந்த 2000 பேர் தற்போது அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக கடந்த மாதம் திடீர் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதனால் யாழ். மாவட்டத்துக்கு வருகை தந்த பலர் யாழ் மாவட்டத்திலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு வரும் நிலையில் இவர்கள் கட்டம் கட்டமாக அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
இதுவரை 5300 பேர் தமது பதிவுகளை மேற்கொண்டிருந்தனர். 2000 பேர் கடந்த 2 நாட்களில் அனுப்பப்பட்டனர்.
ஏனைய வர்கள் இனிவரும் நாட்களில் அனுப்பப்படவுள்ளனர்.
இதில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள 4 மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் வசிப்பவர்கள் சுகாதார வைத்திய அதிகாரியின் சான்றிதழுடன் தமது மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.