மாகாணத்துக்குள்ளான போக்குவரத்துக்கு பாஸ் தேவையில்லை
Share
நாளை திங்கட்கிழமை ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் மாகாணத்துக்குள்ளான போக்கு வரத்துக்கு பாஸ் அனுமதி தேவையில்லை என யாழ்.மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் சுகாதார நடைமுறையுடன் கட்டுப்பாட்டுடன் போக்கு வரத்து சேவைகள் இடம்பெறுவதோடு, மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டுமாயின் பாஸ் அனுமதி பெற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.