Type to search

Local News

மக்களுக்கு அவசியமான பாதுகாப்பு உதவிகளை அரசு வழங்க வேண்டும்

Share

நாட்டில் ஊரடங்குச்சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், சாதாரண வறிய மக்க ளுக்கு அவசியமான பாதுகாப்பு உதவிகளை வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்

நாட்டில் ஊரடங்கு நிலைமை மேலும் நீடிக்கப்பட்டிருக்கிறது. இதனூடாக கொவிட் – 19 கொரோனா வைரஸ் தொற்றா ளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றமை தெளிவாகின்றது.

எனினும் சாதாரண வறிய மக்களின் அன்றாட வாழ்க்கையும் இயல்பாக நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டியுள்ளது.

தொடர்ச்சியாக ஏழாவது வார மாகவும் நாம் ஊரடங்கு உத்தரவிற்கு உட்பட்டுள்ளோம்.

இக்காலப்பகுதியில் அதிக தேவையுடைய, வறிய மக்களுக்கு அரசாங்கத் திடமிருந்து பாதுகாப்பு, உதவிகள் தேவைப்படுகின்றன.

அதற் கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மேலும் குறிப்பிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link