நாட்டுக்கு பாதிப்பில்லாத வகை யில்புதியஅரசியலமைப்பை உரு வாக்க சுதந்திரக் கட்சி பூரண ஒத்துழைப்பு
Share
நாட்டுக்கு பாதிப்பில்லாத புதிய அரசியலமைப் பொன்றை உருவாக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என அந்தக் கட்சியின் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“புதிய அரசியல் திருத்தம் தொடர்பாக ஆலோசித்துள்ளோம். இதற்கு கட்சி என்ற ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகளை முன்வைப்பதற்காக ஒரு குழுவை நாம் நியமிக்கவுள்ளோம்.
இதன் ஊடாக அனைத்து விடயங்களும் ஆராயப்படும்.
பின்னர், அனைவரது கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு, நாட்டுக்கு பாதிப்பில்லாத புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க நாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம்.
சுதந்திரக் கட்சிக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள சில அமைச்சுக்களில் அதிருப்தி காணப்படுவதால், இதுதொடர்பாகவும் நாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.
எதிர் காலத்தில் இது தொடர்பாக நாம் நடவடிக்கை எடுப்போம்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிக்கு எந்தவொரு பதவியும் வழங்காத விடயம் இணக்கப்பாட்டுடன்தான் மேற்கொள்ளப்பட்டது.
அந்தவகையில், அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளும் போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்களிப்பு பலமானதாக இருக்கும்.
அத்துடன் சுதந்திரக் கட்சியை நாம் பாதுகாப்போம். இந்தக் கட்சியை இறுதி வரை கொண்டுசெல்வோம்” என்று தெரிவித்தார்.