யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளரின் விசேட அறிவித்தல்.
Share
ளநாட்டில் ஏற்பட்டுள்ள தற் போதைய இக்கட்டான சூழ்நிலை யில் பிள்ளைகள் தொடர்பில் சுகா தாரம்-பாதுகாப்பு, கல்வி ஆகிய இரு விடயங்களிலும் பெற் றோர் கள் விஷேட கவனம் செலுத்த வேண்டும் என யாழ்ப்பாண வலயக் கல்விப்பணிப்பாளர் செ.சந்திரராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங் களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள தாவது,
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போ தைய இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் பிள்ளைகள் தொட்பில் சுகாதாரம் – பாதுகாப்பு, கல்வி ஆகிய இரு விடயங்களிலும் நீங்கள் விசேட கவனம் செலுத்த வேண்டி யவர்களாக உள்ளீர்கள். நீங்கள் முதலாவதாகக் கவனம் செலுத்த வேண்டிய வியடம் உங்கள்பிள்ளை களின் பாதுகாப்பு என்பதோடு தற்போது பாடசாலைகள் அனைத் தும் மூடப்பட்டு பாடசாலைக் கற்றல் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட் டுள்ள நிலையில் பின்வரும் செயற் பாடுகளில் பெற்றோர்கள் விசேட கவனத்தைச் செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
- பிள்ளைகளை வீட்டிலேயே வைத்திருங்கள். எக்காரணம் கொண்டும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலோ இல்லாவிட் டாலோ வெளியில் விட வேண் டாம்;.
ஆசிரியர்களுக்குரிய பணி யினை முடிந்தவரை பெற்றோர்கள் மேற்கொள்ளுங்கள். உரிய சுகா தார நடைமுறைகளைப் பின்பற்று மாறு பிள்ளைகளை அறிவுறுத்திக் கண்காணித்துக் கொள்ளுங் கள். - தற்போதைய சூழ்நிலையில் பாடசாலைக்கோ அல்லது வெளி யிடங்களுக்கோ எவரது வேண்டு கோளின் பேரிலும் பிள்ளைகளை அனுப்பிவதைத் தவிர்த்துக் கொள் ளுங்கள்.
பாடசாலைகளுக்கு எந்தவொரு விசேட காரணத்தின் பேரிலாவது மாணவர்களையோ பெற்றோர் களையோ அழைப்பதைத் தவிர்க்கு மாறு சகல அதிபர்களுக்கும் ஏற் கெனவே என்னால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. - வீட்டிலிருந்தே பாடங் களைக் கற்றுக்கொள்ளுங்கள். விசேடமாக சகல மாணவர்களும் தங்களிடமுள்ள பாடப்புத்தகங் களை (வுநஒவ டீழழமள) முறையாக வாசியுங்கள். முதலாம் தவணைக் குரிய அலகுகளை வாசித்து அவற் றிலிருந்து சுருக்கக் குறிப்புக்கள் எடுத்துக்கொள்ளுங்கள். குறித்த பாடப் புத்தகங்களிலிருந்து வினா விடை அடிப்படையில் தேடிக் கற் றுக்கொள்ள முயற்சியுங்கள்.
- பாடசாலைகளில் கற்பித்த பாட அலகுகளை மீட்டல் செய்யுங் கள் வலயக் கல்விக் காரியாலயத் தினால் வழங்கப்பட்ட கையேடு களையும் வினாவிடைப் புத்தகங் களையும் வீட்டிலிருந்தே கற்றுக் கொள்ளுங்கள். க.பொ.த சாதா ரணதரப் பரீட்சைக்கான வினா விடை அமைப்புக்கள் இறுவெட்டு க்களில் தயாரிக்கப்பட்டு உரிய வகையில் வழங்குவதற் கான நடவடிக்கைகள் வலயத்தின் கல்வி அபிவிருத்திப் பிரிவினரால் முன்னெடுக்கப்படுகின்றன.
வலயத்துக்குட்பட்ட சகல மாண வர்களுக்கும் உரிய பரீட்சை நோக்கிலான கற்றல் கையேடுகள் தற்போது வலயத்தின் பாடங்களுக் குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்களால் தயார் செய்யப் படுகின்றன. உரிய காலத்தில் அவற்றை மாணவர்களுக்கு வழங்கு வதற்குரிய நடவடிக்கைகள் முன் னெடுக்கப்படும். - தேவையற்ற வகையில் பெற் றோர்களும் மாணவர்களும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பில் குழப்பமடைய வேண் டியதில்லை.
இப்போதைய தேவை பிள் ளைகளின் பாதுகாப்பு என்பதை விசேட கவனத்திற்கு கொள்ளு மாறும் அறியத் தருகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். (ம-3)