சீரற்ற காலநிலையால் 3 பேர் பலி; 1,433 பேர் பாதிப்பு
Share
தெற்கு மற்றும் மலையகத்தில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3 பேர் உயிரிழந்ததுடன், 1,433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் காற்று மற்றும் மரம் முறிந்து விழுதல் என்ப வற்றின் காரணமாகவே பெருமளவான பாதிப்புக்கள் பதிவாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய கேகாலை, கண்டி, முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, பொலநறுவை, அநுராதபுரம், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, களுத்துறை, கம்பஹா, குருநாகல், அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் 436 குடும்பங்களைச் சேர்ந்த 1,433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் அனைத்து மாவட்டங்களிலும் 3 குடியிருப்புக்கள் முழுமையாகவும், 417 குடி யிருப்புக்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அத்தோடு இதுவரையில் 3 மர ணங்கள் பதிவாகியுள்ளதோடு 2 பேர் காயமடைந்துள்ளனர். 3 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.