Type to search

Local News

கொரோனா என்று எமக்குத் தெரியாது

Share

கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை யாரும் அறிந் திருக்கவில்லையென அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவர் தொற்றுக்குள்ளாகும் விதத்தில் வெளியில் நடமாடியவருமல்ல என் றும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் இரண்டாவது கொரோனா தொற்று உயிரிழப்பு நேற்று பதிவாகியது.

முஹம்மத் ஜமால் என்பவரே உயிரிழந்தார். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாக கொண்ட இவர், நீர்கொழும்பு பலகத்துறை பகுதியில் வசித்து வந்தார்.

அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றை அவர் மறைத்தார் என வெளியான செய்தியை குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

அவருக்கு கொரோனா தொற்று இருந்ததை நேற்றுதான் குடும்பத்தினரே அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

நீண்டகாலமாக சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்மா என சிரமப்பட்டு வந்துள்ளார்.

தொடர்ந்து இந்த வருத்தங்களால் அவர் சிரமப்பட்டு வருவதால், அண்மையில் ஏற்பட்ட சளி, இருமலையும் குடும்பத்தினர் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அவர் தொடர்ந்து நோயாளியாகவே இருந்ததால், வீட்டிலேயே இருந்தார்.

வெளியே செல்வதில்லை. சந்தைக்கு மீன் வாங்க சென்று வந்தார்.
அவருக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டதென்பதை தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. சந்தைக்கு சென்று வந்த சமயத்தில் தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து சுகாதார அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு நவலோகா வைத்தியசாலை யில் அவர் ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும், அவரது உடல்நிலை சீரடையாததையடுத்து, உறவினர்களால் நேற்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை யில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட் டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டு, கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், அவரது உடல் நிலை மோசமடைந்ததால் நீர்கொழும்பு வைத்தியசாலையிலேயே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link