Type to search

Local News

கொரோனாவால் தமிழ் வைத்தியர் கனடாவில் பலி

Share

கனடாவில் கொரோனா (கோவிட் -19) தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் மரண மடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

74 வயதான அன்ரன் செபஸ்டியன் என்பவரே மரணமடைந்துள்ளார்.

ஒன்ராரியோ மாகாணத்தின் கிங்ஸ்ரன் வைத்தியசாலையின் ஆலோசகராக இவர் கடமையாற்றியிருந்தார்.

ஏற்கெனவே வைத்தியர் கடமையில் இருந்து இளைப்பாறிய இவர், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட வைத்தியர்களுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மீண்டும் கடமையில் இணைந்து கொண்டவர்.

சில வாரங்கள் கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கு சிகிச்சையளித்து வந்த இவரும் நோயின் தாக்கத்திற்கு உள்ளாகி மரணமடைந்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link