கரும்புத் தோட்டத்திற்கு விசமிகளால் தீ வைப்பு
Share
திருகோணமலை கந்தளாய் சீனித்தொழிற்சாலைக்குரிய விதை நாற்றுப் பண்ணையில் நான்கு ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட கரும்புத் தோட்டத்திற்கு இனந்தெரியா தோரால் தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் சீனித்தொழிற்சாலையை அண்டிய பகுதியில் எம்.சி.சுகர்ஸ் லங்கா நிறுவ னத்தால் நான்கு ஏக்கர் கரும்புச் செய்கைக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டதாகவும், இராணுவத்தினர் பொலிஸார், மற்றும் தொழிலாளர்களின் உதவி யுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை தற்போது சீனித் தொழிற்சாலை முடங்கிப் போயுள்ளதால் கரும்புகளை அரைக்கவும் முடியாது, கொண்டு செல்லவும் முடியாது, நட்டத்தை ஏற்றுக்கொள் ளத்தான் வேண்டும். தொழிற்சாலையை இயங்கச் செய்ய நடவடிக்கைகள் எடுக்குமாறும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.