ஒரு இலட்சம் பெறுமதியான மரக்கடத்தல் விசேட அதிரடிப்படையால் முறியடிப்பு
Share
வவுனியா பூவரசங்கு ளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கர் காட்டுப் பகுதியில் சட்டவிரோத மான முறையில் கடத்திச் செல்லப்படவிருந்த முதிரை மரக்குற்றிகள், அறுக்கப் பட்ட முதிரைப் பலகைகள் மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்திய வாகனம் என்பன பூவரசங்குளம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த காட்டுப்பகுதி யில் முதிரை மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக பூவரசங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று முன்தினம் இரவு அப்பகுதிக்கு சென்ற விசேட அதிரடிப் படையினர் குறித்த மரக் கடத்தல்காரர்களை பிடிக்க சென்றபோது அவர்கள் வாகனத்தை விட்டு விட் டுத் தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதி யான 9 முதிரை மரக்கு ற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கடத்தலிற்கு பயன் படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட முதிரை குற்றிகள் மற்றும் வாகனம் வவுனியா பூவரசங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இக்கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் வவுனியா பூவர சங்குளம் பொலிஸாரி னால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.