அர்த்தமற்றதாகும் ஊரடங்கு! – ஆனல்ட் ஆதங்கம்
Share
நாட்டில் நடை முறைப் படுத்தப்படும் ஊரடங்கா னது அது தளர்த்தப்படும் காலப்பகுதியில் அர்த்தம ற்றதாகிவிடுகின்றது என யாழ். மாநகர சபை முதல் வர் இ.ஆனல்ட் ஆதங் கத்தை வெளியிட்டார்.
நேற்று முன்தினம் இடம் பெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்தில் ஊரடங் ;குச் சட்டம் குறிப்பிட்ட நேரம் தளர்த்தப்பட்ட சந் தர்ப்பத்தில் ஆயிரக்கண க்கில் பொது மக்கள் யாழ் மத்தியில் ஒன்று கூடியி ருந்தமையை அவதானி க்க முடிந்தது.
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்க ளைப் பாதுகாக்க வேண் டும் என்பதற்காக நடை முறைப்படுத்தப்படும் ஊரட ங்குச் சட்டத்தின் முக்கிய நோக்கமான மக்கள் கூட் டமாக ஒன்று கூடுவதைத் தடுக்கும் செயன்முறை ஊரடங்கு தளர்த்தப்பட்ட சந்தர்ப்பங்களில் வலு வற்றதாகிவிடுவதை அவ தானிக்க முடிந்தது.
அதாவது வைத்தியர் களால் இத்தாக்கத்திலிரு ந்து பாதுகாப்பாக இருப் பதற்காக முன்வைக்கப் படும் ஆலோசனைகளான தனிமைப்படுத்தல், கை களை கழுவுதல், சுத்த மாக இருத்தல், இரு நபர்க ளுக்கிடையில் குறிப்பிட்ட இடைவெளியைப் பேணு தல் என்பன ஊரடங்கு தளர்த்தப்படும் சந்தர்ப் பங்களில் மீறப்படுகின்றன.
ஒன்று கூடும் மக்கள் வைத்திய ஆலோசனைக ளைப் பொருட்படுத்தாது பொருட்களைக் கொள் வனவு செய்வதில் மாத் திரமே அவதானம் செலுத் துகின்றனர். இது ஊரட ங்கின் நோக்கத்தை சீர் குலைத்து விடுகின்றது.
எனவே ஊரடங்கு தள ர்த்தல் என்பதை சிந்திக்க வேண்டியுள்ளதுடன், மக் களின் தேவைகளை எவ் வாறு பூர்த்தி செய்ய முடி யும் என்பது தொடர்பில் புதிய பொறிமுறைமை ஒன் றை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது.
ஒவ்வொரு உள்ளுரா ட்சி மன்றங்களினதும் எல்லைப் பரப்பினுள் இல குவாக மக்கள் தமக்கான பொருட்களைக் கொள் வனவு செய்வதற்கான முறைமை களை ஏற்படுத்தி நகர்ப் பகுதியில் பலர் ஒன்று கூடுவதை தவிர்க்க நட வடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
இதைக் கணக்கிலெடுக்காது விடுவோமாக இருந் தால் மக்கள் ஒன்று கூடு வதன் மூலம் ஏற்படும் பாரிய சிக்கல் நிலைகளை எம்மால் கட்டுப்படுத்த முடியாது போய் விடும்.
எனவே இது தொடர் பில் மக்கள் சேவையை வழங்கிக் கொண்டிருக் கும் பல்வேறு துறையிலும் உள்ள வைத்தியர்களுட னும் கலந்துரையாடியி ருக்கின்றேன்.
மக்கள் ஒன்று கூடும் சந்தர்ப்பங்க ளை குறைப்பதற்காக துறை சார்ந்தவர்களையும், வை த்தியர்களையும் உ ள்ளடக் கியதாக ஆளுநர் தலை மையில் விசேட கலந்து ரையாடல் ஒன்றை விரை வாக நடத்துவது தொடர்பில் முயற்சித்து வருவ துடன் அதில் கலந்துரை யாடி கூட்டு அறிக்கை ஒன்றின் மூலம் பொது மக்களுக்கான சேவைகளை அவர்களின் உள்@ராட்சி மன்ற எல்லைகளுக்குள் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை எவ்வாறு இலகு வான வழிமுறை ஒன்றின் மூலம் மேற்கொ ள்வது என்பது தொடர் பாகவும், மேலும் வடக் கின் எல்லைகள் மூடப்பட்டு எவ்வாறு பொது மக் கள் ஒன்று கூடும் வாய்ப் புக்கள் குறைக்கப்பட்டுள்ள தோ அது போன்று ஊரடங்கு தளர்த்தப்படு கின்ற போது யாழ.மாநகர நகர்ப் பகுதியில் மக்கள் ஆயிரக் கணக்கில் ஒன்று கூடு வதை தவிர்க்கும் வகை யில் மாநகர எல்லைகளை மூடி அத்தியாவசிய வைத் தியசாலை தேவைகள், மருத்துவ வசதிகளுக்கான அனுமதிகளை மாத்திரம் வழங்குவது தொடர்பாக வும் ஆளுநர் ஊடாக, ஜனா திபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்வது தொடர் பாகவும் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு சகல உள்@ ராட்சி மன்றங்களின் தவி சாளர்கள் , பிரதேச சபை நிர்வாகமும் தமது ஒத் துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தினார்.