அத்தியாவசிய நுகர்வு பொருட்களை அதிக விலைக்கு விற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
Share
அத்தியாவசிய நுகர்வு பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது ஊரடங்குச்சட்ட விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உல்லாசபயண விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கம்பஹா செயலகத்தில் இடம்பெற்ற அரச அதிகாரிகளின் உயர்மட்ட கலந்துரையாட லின் போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வர்த்தகர்கள் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக பெரும் எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது குறித்து நுகர்வோர் அதிகாரசபையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன் என்றார்.