அத்தியாவசிய உணவு விற்பனை நிலையங்களில் நேரடி ஆராய்வு
Share
யாழ்.மாவட்டத்தில் தொடர் ஊரடங்கினால் அத்தியாவசிய பொருட்களின் திடீர் விலை உயர்வு, தட்டுப்பாடு மற்றும் பதுக்கல் தொடர்பான முறைப்பாடுகளையடுத்து பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் விசாரணை உத்தியோத்தர்களினால் நேற்று பல விற்பனை நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அத்துடன் நியாயமான விலைகளில் மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதற்கான வழி வகைகள் மேற்கொள்ளப்பட்டு வர்த்தக நிலையங்களில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் மொத்த இருப்பும் கணக்கெடுக்கப்பட்டன.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் நேற்று யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, திருநெல்வேலி, கொடிகாமம், சாவகச்சேரி, கைதடி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன் இருப்புக் கணக்கும் எடுக்கப்பட்டது .
நேற்று பரிசோதிக்கப்பட்ட 10 மொத்த வியாபார நிலையங்களில் காணப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விபரம் பின்வருமாறு,
ஆட்டக்காரி அரிசி 10 மெற்றிக்தொன், கோதுமை மா 157.5 மெற்றிக்தொன், மஞ்சள் பருப்பு 19 மெற்றிக்தொன், கீரிசம்பா 59 மெற்றிக்தொன்.
நேற்றைய சோதனை நடவடிக்கையில் நியாயமான விலைகளில் மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டு மேற்படி நடவடிக்கை தொடர்பான தேவைப்பாடுகளும் ஆராயப்பட்டுள்ளன.