அத்தியட்சகரை இடம்மாற்றக்கோரி வைத்தியர்கள் நாளை போராட்டம்
Share
வைத்திய அட்சகரை இடம் மாற்றக் கோரி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இது தொடர்பாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில்,
புதிதாக கடமையேற்றுள்ள பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் அத்தியட்சகரை இடமாற்றம் செய்வது தொடர்பாக எவ்விதமான சாதக மான பதில்களும் எட்டப்படவில்லை.
இப்போது கொரோனா நோய்த்தொற்றில் இருந்து, மக்களுடையதும் வைத்தியர்களதும் ஏனைய சுகாதார உத்தியோகத்தர்களினதும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக எமது நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற எதுவிதமான சாதக மான பதிலும் மாகாண சுகாதார அமைச்சிலிருந்து கிடைக்கப் பெறாததால் நாம் பணி புறக்கணிப்பில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
நாளை (இன்று) காலை 10 மணிக்கு இடம்பெறும் பருத்தித்துறை ஆதார வைத் தியசாலையின் வைத்திய அதிகாரிகளின் பொதுக்குழுக்கூட்டத்தில் அடையாள பணிப் புறக்கணிப்பா அல்லது முழு நேர பணிப்புறக் கணிப்பில் ஈடுபடுவதா என்பது தொடர்பான தீர்க்கமான முடிவு எட்டப்படும்.
மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரை உடனடியாக இடமாற்றம் செய்யும் கோரிக்கையை முன்வைத்து நாளை 8 மணி தொடக்கம் பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.