பாதுகாப்பான மதுபானம் எது?
Share
மதுபானம் பாவிப்பது பாதுகாப்பானதா? மதுபான பாவனையை திடீரென்று நிறுத்திக் கொள்வது ஆபத்தானதா? சிறித ளவு மதுபாவனை உடலுக்கு நன்மை பயக்குமா? பாதுகாப்பான மதுபானம் எது? போன்ற பல தொடர்ச்சியான சர்ச்சைகள் எம் மத்தியில் இருந்து கொண்டிருக் கின்றன.
மதுபானம் பயத்தைப் போக்கி உற்சாகத்தை கொடுக்கிறது என்ற கருத்தும் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்களுக்கு இது உடல் அலுப்பை போக்கி ஒரு வலி நிவார ணியாக தொழிற்படுகிறது என்ற அபிப்பிராயமும் பொதுவாக இருந்து வருகிறது. அத்துடன் மனச்சஞ் சலத்திற்கு இது மருந்தாகிறது என்று கருதுபவர்களும் இருக் கிறார்கள். எனவே இவை சம்பந் தமான தெளிவான உண்மை களை தெரிந்து கொள்ள மதுபானம் சம்பந்தமாக நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகள் உறுதுணையாக அமை கின்றன.
மதுபானப் பாவனையால் ஈரல், இரைப்பை, குடல், தொண்டை, களம், மூச்சுக்குழல் போன்ற பல்வேறு உடல் உறுப்புக்களில் புற்றுநோய் ஏற்படும் சந்தர்ப்பம் அதிகரிப்பதுடன் அந்த உறுப்புக் களில் கடுமையான பாதிப்புகளை யும் ஏற்படுத்துகின்றன என்பது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப் பட்டிருக்கிறது. அத்துடன் இளம் வயதினரிடையே காணப்படும் மதுப் பாவனை பழக்கத்தினால் மூளை விருத்தியில் சில நிரந்தரமான பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
இதற்கு மேலதிகமாக மதுப்பாவ னையானது நிறை அதிகரிப்பு, ஆண்மைக்குறைவு, போசாக்குக் குறைவு, மனநல தாக்கங்கள் போன்றவற்றிற்கும் காரணமாக அமைகின்றது. இவ்வாறான பரந் துபட்ட சுகாதார தாக்கங்களை கருத்திற்கொண்டு ஆய்வாளர்கள் சிறிதளவு மது அருந்துவதும் உடல் நலத்திற்கு தீங்கானது என்ற முடிவிற்கு வந்திருக்கிறார்கள்.
பியர், வைன், கள்ளு போன்ற வற்றில் மதுவின் செறிவு குறைவாக இருந்தாலும் இவையும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப் பவையே. எனவே பாதுகாப்பான மதுபானம் என்ற ஒன்று கிடையாது. சிகரெட், பீடி போல் மதுபானமும் ஒரு தீண்டத்தகாத பொருளாக சித்திரிக் கப்படுகிறது. இதனை எம் முன் னோர்கள் முன்னமே அறிந்திருந்த தால் தான் மது அருந்துவதை பஞ்சமாபாதகங்களில் ஒன்றாக வகைப்படுத்தி இருக்கிறார்கள்.
மதுபானம் அருந்திய நிலையில் ஒருவரின் திட்டமிடும் திறன், தீர் மானம் எடுக்கும் திறன், சாதுரியமாக நடந்துகொள்ளும் திறன் என்பன பெருமளவில் குறைந்துவிடும் என ஆய்வுகள் தெளிவாகக் காட்டி நிற் கின்றன. சாதுரியமாக நடந்து கொள் ளும் திறன் அற்ற நிலையில் ஒருவர் பேசுவதைப் பார்த்து அவர் பயம் தெளிந்து உற்சாகமாக இருக்கிறார் எனக் கருதிவிட முடியாது. கடுமை யான வேலை செய்பவர்கள் தமது உடல் அலுப்பை போக்குவதற் கென்று மது அருந்துவார்களாயின் குறுகிய மற்றும் நீண்டகால அடிப் படையில் அது அவர்களின் உடலில் பல பாரதூரமான தாக்கங்கள் ஏற்ப டுவதற்கான வாய்ப்புகள் இருக் கின்றன.
அத்துடன் காலப்போக்கில் அவர் கள் மதுவுக்கு அடிமையாவதுடன் பல சமூகப் பொருளாதாரப் பிரச்சினை களுக்கும் முகம் கொடுக்க வேண் டிய நிலை ஏற்படும். எனவே மதுவை ஒரு வலி நிவாரணியாக கருதிப் பாவிப்பது ஆபத்தான ஒரு நடைமுறையாகும். மனக்கவ லை யைப் போக்குவதற்கு என்று கூறி மது அருந்துபவர்கள் அந்தப் பழக்க வழக்கத்திற்கு அடிமையாகி பல மனத்தாக்கங்களுக்கு ஆட்படுகின் றனர். எனவே மனக்கவலைக்கு மது ஒரு மருந்து ஆகாது.
அத்துடன் மதுப்பழக்கமானது பல விவாகரத்துக்களுக்கும் வீதி விபத் துக்களுக்கும் தொழில் நிலையப் பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைகின்றது. மதுவை சிறிது சிறி தாக குறைத்து நிறுத்த முயல்பவர் கள் அதிலே வெற்றி பெறுவதில்லை. அதனை திடீரென்று நிறுத்திக் கொள்வதால் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை. போதைக்கு அடிமையானவர்கள் அதனை முற் றாக நிறுத்த விருப்பம் இருந்தும் அதனை நடைமுறைப்படுத்த முடியா மல் இருப்பின் அல்லது அதனை நிறுத்தும் பொழுது சில வேண்டத் தகாத அறிகுறிகள் ஏற்படின் அரச மருத்துவமனைகளின் உதவியை நாட முடியும். இவ்வாறானவர் களுக்கு உதவுவதற்கென்று மருத்து வமனைகளில் தனியான பிரிவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
கொண்டாட்ட நிகழ்வுகளின் பொழுது மது பாவிக்கப்படுவது பல சமூக, சுகாதார, கலாசார, பொரு ளாதார பாதிப்புக்களை ஏற்படுத்தி நிற்கின்றது. அத்துடன் புதிதாக பலரை மதுப்பாவனைக்கு தூண்டு வதாகவும் அமைந்து விடுகிறது. எனவே கொண்டாட்ட நிகழ்வுகளில் மதுப்பாவனை முற்றாக தவிர்க்கப் பட வேண்டியது அவசியமாகின்றது.
பெற்றோர்களின் மதுப்பாவனை பிள்ளைகளில் பல்வேறுபட்ட மனத் தாக்கங்களை ஏற்படுத்துவதுடன் அவர்களும் தீய வழிகளில் செல் வதற்கு தூண்டுகோலாக அமை கின்றது. மது பாவிக்கும் ஒருவர் இன்னொருவரை மது அருந்த வேண்டாம் என்று கேட்டுக் கொள் ளும் தார்மீக உரிமையை இழந்து விடுகிறார்.
மதுவின் தாக்கங்களை தவிர்ப்ப தற்கு அதன் பாவனையை முற் றாக நிறுத்த உறுதிபூணுவோம். எங்கள் நண்பர்களையும் மதுப்ப ழக்கத்திலிருந்து மீட்க முயலு வோம்.
யாராவது எம்மை மது பாவிக் குமாறு கேட்டுக்கொண்டால் அதனை முற்றாக நிராகரிப்போம். எம்மை மது பாவிக்கத்தூண்டிய வரையும் அதன் பாவனையை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வோம்.
பொது நிகழ்வுகளில் மதுப்பா வனையை தவிர்த்து விடுவதில் பெருமை கொள்வோம். மதுவுக்குச் செலவிடும் பணத்தை சேமித்துப் பயனுள்ள காரியங்களுக்கு பயன் படுத்துவோம். போதையற்ற தேசம் நோக்கிப் பயணிப்போம்.
Dr.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்.