வவுனியா நகர சபை சுகாதார பரிசோதகருக்கு கொரோனாத் தொற்று
Share

வவுனியா நகர சபை சுகாதார பரிசோதகருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினரால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வவுனியா நகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.