Type to search

Headlines

யாழ். போதனாவில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி

Share

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த நபருடைய சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மரணச் சடங்கில் கலந்து கொண்ட 30 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


யாழ். சிறாம்பியடியைச் சேர்ந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட வேளை நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் வீட்டாரிடம் வழங்கப்பட்டது.


இந்நிலையில் இறந்தவருக்குக் கொரோனா என்பதால் மரண வீட்டுக்குச் சென்ற அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link