யாழ். தென்மராட்சியில் இரு கிராமங்கள் முடக்கப்பட்டன.
Share
கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவகர் பிரிவுகளுமே நேற்றிரவு முதல் மறுஅறிவித்தல் வரை முடக்கப்படுகிறது.
அதனடிப்படையில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் வெளியில் செல்வதற்கோ அல்லது வெளியில் உள்ளவர்கள் அந்தக் கிராமங்களுக்குச் செல்வதற்கோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மருத்துவர் ஆ.கேதீ ஸ்வரன் தெரிவித்தார்.
கொடிகாமம் சந்தை வியாபாரிகள் மற்றும் நகர வர்த்தகர்கள் 154 பேரிடம் நேற்று திங்கட்கிழமை எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கொடிகாமம் பொதுச்சந்தையை தொடர்ந்தும் முடக்க நிலையில் வைத்திருந்து ஏனையவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொடிகாமம் பொதுச்சந்தை வியாபாரிகள் மற்றும் நகர வர்த்தகர்கள் முப்பது பேருக்கு ஒரு வாரத்தில் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலைமை பாரிய அச்ச நிலைமையை தென்மராட்சி மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
கொடிகாமம் சந்தையை வரணி, எழுதுமட்டுவாள், கச்சாய், கொடிகாமம், மந்துவில், மிருசுவில் கிராம மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் அதிகரித்த தொற்றால் சந்தையை நாடிய மக்களும் தொற்றுக்கு ஆளாகக்கூடிய அபாய நிலை காணப்படுகிறது