Type to search

Headlines

யாழில் கொரோனாவால் இருவர் உயிரிழப்பு வடக்கில் நேற்றும் 28 பேருக்கு தொற்று

Share

யாழில் கொரோனாவால் இருவர் உயிரிழந்ததுடன் யாழ். மாவட்டத்தில் 20 பேர் உட்பட வடக்கில் 28 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதன்படி நேற்று 707 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ். மாவட்டத்தில் 20 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும், கிளி நொச்சியில் 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் குடாநாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21 ஆகவும் வடக்கு மாகாணத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆகவும் அதிகரித்துள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.


யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வீதி யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவர் ஒருவரும் இளவாலையைச் சேர்ந்த 75 வயதுடைய மூதாட்டி ஒருவரும் நேற்று முன்தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link