மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று : சுகாதார நடைமுறைகளுடன் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் அனுமதி
Share
தமிழினப் படுகொலை நாளான மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்படவுள்ளது.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உயிரிழந்த உறவுகளை நினைவு கூர முடியும் என முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் ஆண்டுதோறும் மே 18ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது.
இந்நிலைளயில் இவ்வாண்டும் நினைவேந்தலுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்ட நிலையில் சுமார் 20 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவு பெறப்பட்டிருந்த நிலையில் குறித்த தடை உத்தரவுக்கு எதிராக நகர்த்தல் பத்திரம் நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டது
இதனடிப்படையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையில் நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டும் என முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.