மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு
Share
நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமாயின் பயணக் கட்டுப்பாடு
விதிக்கப்படும் நிலையேற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,
கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் தீவிரமாக அதிகரிக்குமாயின் பயணக் கட்டுப்பாடு
விதிக்கப்படும். அது மாகாணங்களுக்கிடையிலான பயண கட்டுப்பாடாக அமையும் என்றார்.
இதுவரையில் நாட்டின் 14 மாவட்டங்களில் 6 பொலிஸ் பிரிவுகளும் 98 கிராம
சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.