நீரிழிவை குணப்படுத்த முடியுமா?
Share
நீரிழிவை குணப்படுத்த முடியுமா? அதாவது நீரிழிவு நிலைக்கு மருந்து பாவித்த ஒருவர் அந்த மருந்துகளை முற்றாக நிறுத்திக் கொள்ளக்கூடிய நிலை ஏற்படுமா? இது நடைமுறைச் சாத்தியமாகுமா? என்பன பொதுவாக பலராலும் கேட்கப்படும் ஒரு விடயமாக இருந்து வருகிறது.
நீரிழிவு நிலைக்கான மருந்துகளை சிலசமயம் நிறுத்திக் கொள்வது சாத்தியம் ஆகக்கூடிய ஒரு விடயமே. சிலருக்கு நீரிழிவுக்கான மருந்துகளை முற்றாக நிறுத்தக் கூடிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக பின்வரும் நிலை உள்ளவர்களுக்கு இது சாத்தியப்படக் கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது.
கர்ப்பகாலத்தில் நீரிழிவு ஏற் பட்டவர்கள் – கர்ப்பகாலம் முடிவ டைந்ததும் நீரிழிவு மருந்துகளை நிறுத்திக் கொள்வது சாத்தியப்படலாம்.
அழுத்தங்கள், தொற்றுகள் என்பவற்றுடன் நீரிழிவு கண்டறியப்பட்ட வர்கள்- அந்த நிலைமைகள் கட்டுப் பாட்டிற்கு வந்த பின்னர் நீரிழிவுக் கான மருந்துகளை நிறுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு.
அதிகரித்த உடல் நிறையுடன் ஒழுங்காக உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என்பவற்றில் ஈடுபடாத ஆரம்பநிலையில் கண்டறியப்பட்ட நீரிழிவு நோயாளர்கள் தமது வாழ் க்கை முறைகளை மாற்றி அமைத்து நிறைகுறைந்து பொருத்தமான நடவ டிக்கைகள் எடுப்பதன் மூலம் இது சாத்தியப்படலாம்.
சில மருந்துகள் காரணமாக நீரி ழிவு ஏற்பட்டவர்கள் அந்த மாத்திரை களை நிறுத்தியவுடன் நீரிழிவு நிலை தானாக குறைவடையலாம்.
சில ஓமோன்களின் அதிகரித்த சுரப்பால் ஏற்படும் நீரிழிவு நிலை அந்த அடிப்படைக் காரணம் நிவர்த்தி செய்யப்பட்டவுடன் தானாக மறைந்து விடும்.
ஒழுங்கான உடற்பயிற்சி, ஒவ் வொரு உணவுடனும் பச்சை இலை வகைகளை சேர்த்துக் கொள்ளுதல், சரியான உடல் நிறையை பேணுதல், நீரிழிவு ஏற்படுவதற்கான அடிப்படை காரணிகளை அகற்றுதல், மன அமைதியை பேணுதல், சீனி, சர்க்கரை, பனங்கட்டி அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்த்தல் போன்ற சிறிய நடவடிக்கைகள் மூலம் நாம் பெரிய பலன்களை பெற்றுக் கொள் ளலாம். பொருத்தமான நடவடிக் கைகள் மூலம் மருந்துகளை குறை த்துக் கொள்வதோ நிறுத்திக் கொள் வதோ சாத்தியமாகும்.
ஒரு தடவை நீரிழிவுத் தன்மை இருப்பது கண்டறியப்பட்டவர்கள் தொடர்ந்து வரும் காலங்களில் அவர் களின் நீரிழிவு நிலை கட்டுப்பாட்டில் இருந்தாலும் 2-3 மாதங்களுக்கு ஒரு தடவையாவது குருதி குளுக் கோசை சோதித்துப் பார்த்துக் கொள் வது அவசியமாகும். வாழ்க்கை முறையில் சிறுசிறு மாற்றங்களை செய்து பாரிய நன்மைகளை பெற்றுக் கொள்ள முயற்சி எடுப்போம்.
நீரிழிவு நிலை ஒரு பாரிய நோய் என்று எண்ணி மனக்குழப்பம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதனை கட்டுப்படுத்த வழங்கப்படும் மருந்து கள் பக்கவிளைவு குறைந்தவை. எனவே மருத்துவ ஆலோசனை இன்றி இதற்கான மருந்துகளை குறைக்கவோ அல்லது நிறுத்தவோ முயற்சி எடுப்பது பாதுகாப்பானது அல்ல. இந்த நிலையை நாம் மன ஊக்கத்துடன் வெற்றிகரமாக எதிர்கொண்டு சுகதேகியாக வாழ முடியும்.
DR. சி. சிவன்சுதன்
பொது வைத்திய அதிகாரி