Type to search

Headlines

நாட்டை முடக்கினால் அன்றாடம் உழைத்து உண்பவர்கள் என்ன செய்வது?

Share

கொரோனா தொற்றினால் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை. நாட்டை முடக்கும் தீர்மானத்தை மட்டும் எடுக்கவேண்டாம் என அன்றாடம் உழைத்து வாழும் மக்கள் கூறுகிறார்கள்.


ஆனால் இந்த விடயத்தில் சகல தரப்பினரதும் கருத்துக்களை நாங்கள் கருத்தில் எடுக்க வேண்டியுள்ளது என மேற்கண்டவாறு இராணுவ தளபதியும் தேசிய கோவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இது குறித்து மேலும் அவர் கூறுகை யில்,
சிலர் பிரச்சினையின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்து பரிந்துரைகளை செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இருப்பினும், நாம் உடல் நலம் மற்றும் பொருளாதாரம் இரண்டையும் ஆராய வேண்டும்.

தினசரி ஊதியம் பெறுபவர்கள் வேலை செய்ய வாய்ப்பு இல்லாவிட்டால் தங்கள் வீட்டு அடுப்பை எரிக்க முடியாது என்று புலம்புகிறார்கள். சம்பளம் பெறும் ஊழியர்களைப் பற்றி மட்டுமே நினைத்து நாட்டை முடக்குகிறோம் என்று அவர்கள் புகார் கூறுகின்றனர்.


வீட்டில் இருந்து கொண்டு மாதாந்தம் சம்பளம் பெறுபவர்களே நாட்டை முடக்குமாறு கோருகின்றனர். வேலை செய்யாமல்; சம்பளம் பெற்றுக் கொண்டு நாட்டை முடக்குமாறு கோருகின்றனர் என குற்றம் சுமத்தினார்.


இதற்கிடையில், இன்னும் சிலர் தங்கள் தயாரிப்புக்களை விற்க முடியாதெனவும் கோவிட் -19 ஆல் கொல்லப் பட்டாலும் நாட்டை மூட வேண்டாம் என்று கேட்கிறார்கள்.


முடிவுகளை எடுக்கும்போது நாம் எல்லாத் தரப் பினரையும் கருத்தில் கொள்ள வேண்டும். நாங்கள் அதை ஊர டங்கு உத்தரவு என்று அழைக்கவில்லை என்றாலும், அது ஊரடங்கு உத்தரவைப் போன்றது.


இருப்பினும், பயணக் கட்டுப்பாடுகள் ஊரடங்கு உத்தரவைப்போல கண்டிப்பாக இல்லை. ஊரடங்கு உத்தரவின்போது அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்கள் செயற்பட நாங்கள் அனுமதிக்கவில்லை, ஆனால் இப்போது நாங்கள் அனுமதி வழங்கியுள்ளோம். பயணத்தைத் தடுப்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம் என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link