Type to search

Headlines

ஒரு பண்பாட்டு அடையாளம் போல மாஸ்க் அணியும் கலாசாரம்

Share

கொரோனாத் தொற்றில் இருந்து தானும் மற்றவர்களும் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு முகக் கவசம் அணிவது இலங்கையில் சட்ட வலுவுடையதாக ஆக்கப்பட்டுள்ளது.


மாஸ்க் அணிவதால் கொரோனாத் தொற்றில் இருந்து பாதுகாக்கப்படுவது என்ற விடயம் விஞ்ஞான ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதன் காரணமாக உலகம் முழுமையிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இருந்தும் எங்கள் நாட்டில் மாஸ்க் அணிவது ஒரு பண்பாட்டு அடையாளம் போல இருப்பதுதான் வேதனைக்குரியது.


அதாவது மாஸ்க் அணிகின்றவர்கள் அதனை எதற்காக அணிகின்றோம் என்ற நோக்கத்தை மறந்து மாஸ்க் அணிகின்றனர்.


இன்னும் சிலர் மாஸ்க் அணியாமலே அதனைத் தவிர்த்து வருகின்றனர். இவர்கள் பற்றி நாம் பிரஸ்தாபிப்பதைத் தவிர்த்து, மாஸ்க் அணிகின்றவர்கள் அதனை உரிய விதிமுறையில் அணியாமல் நடந்து கொள்வது பற்றிச் சிந்திப்பது பொருத்துடையது.


அதாவது நேற்று முன்தினம் மாஸ்க் அணியாமல் யாழ்.நகர்ப் பகுதியில் நடமாடியவர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் இருந்தவர்களை பொலிஸார் அலாக்காகத் தூக்கி பஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்றனர்.


இவ்வாறு மாஸ்க் அணியாதவர்களை; கொவிட் பாதுகாப்பு அங்கிகளை உடுத்தியி ருந்த நான்கு பொலிஸார், தூக்கிச் சென்றமை பார்ப்போரை வியக்கவைத்தது.


பரவாயில்லை. இப்படிச் செய்வதன் மூலம் மாஸ்க் அணிவதை முழுமையாக அமுல் படுத்த முடியும் என்ற நினைப்பில் பொலிஸார் அவ்வாறு செய்திருக்கலாம். இருந்தும் அவர்களின் நடவடிக்கையும் பெரிதாக வேலை செய்யவில்லை என்பதை அவதானிக்க முடிகிறது.


அதாவது மாஸ்க் அணிகின்றவர்கள் மாஸ்க்கை தமது நாடிக்கு அணிகின்றனரே தவிர, அதனை அணிவதன் நோக்கத்தை அவர்கள் இம்மியும் சிந்தித்திலர்.


இதுதவிர, ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய முகக் கவசங்கள் இப்பொழுது மாதக் கணக்கில் பயன்படுத்தப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.


ஆக, முகக் கவசம் என்பது ஏதோ இந்தக் காலத்தில் மனிதர்கள் அணிய வேண்டிய ஒரு பண்பாட்டு அடையாளம்போல,
அல்லது முகக் கவசம் அணியாவிட்டால் பொலிஸார் கைது செய்வர் என்ற பயத்தில் அணியப்படுகின்றதே தவிர, கொரோனாத் தொற்றில் இருந்து எம்மையும் எம் குடும்ப உறுப்பினர்களையும் மற்றவர்களையும் பாதுகாப்பதற்காக மாஸ்க் அணிகின்றோம் என்ற எண்ணத்தில் மாஸ்க் அணியயப்படவில்லை என்பதை இங்கு கூறித் தானாக வேண்டும்.
இந்த மனநிலை மாறாதவரை மாஸ்க் அணிவதால் ஏற்படக்கூடிய அனுகூலம் எங் களுக்கு மிகக் குறைவாகவே இருக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link