24 மணி நேரத்துக்குள் 9ஆவது நபரும் உயிரிழப்பு கொரோனா தொற்றால் மேலும் ஒரு பெண் மரணம்
Share

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் 9ஆவது உயிரிழப்பு நேற்று பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் மோதரையில் வசிக்கும் 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப் பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 8ஆவது நபர் உயிரி ழந்ததாக அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 9ஆவது நபரும் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் இறந்த இரண்டாவது பெண்மணி இவராவார்.
இந்தப் பெண் சுமார் ஒரு மாத காலமாக நோய்வாய்ப்பட்டு வீட்டில் இருந்த தாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நோய் நிலை மோசமடைந்ததால் அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து அவர் அங்கொடை தேசிய தொற்று நோயியல் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டு பின்னர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அந்தப் பெண் நேற்று மதியம் 12.50 மணியளவில் இறந்துவிட்டார்.
இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த பெண்ணின் மெத் சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 239 வீடுகளைச் சேர்ந்த 1200 க்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.