20ஆவது திருத்தத்துக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கை 2ஆம் திகதி ஒத்திவைப்பு
Share

நடப்பு அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டிருக்கும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் மீதான நீதிமன்ற நடவடிக்கை எதிர்வரும் 02ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் உள்ளிட்ட 39 மனுக்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனுக்கள் மீதான நீதி மன்ற நடவடிக்கை நேற்று முன்தினம் ஆரம்பித்திருந்த நிலையில் 39 மனுக்களையும் சீராய்வு செய்யும் நடவடிக்கைகள் கடந்த இரு நாட்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 2ஆம் திகதி முற்பகல் 9.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.