Type to search

Headlines

வெசாக் தினத்தை முன்னிட்டு 228 கைதிகள் விடுதலை

Share

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு அமைய இவ்வாண்டும் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

அதன்படி 228 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன் னிப்புக்கு அமைய நேற்றுக் காலை விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளில் அபராதம் செலுத்த முடியாதவர்கள் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க தகுதியுடைய கைதிகளுக்கே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

இதேவேளை கடந்த மூன்று நாட்களில் நன்னடத்தை அடிப்படையில் 62 கைதிகள் விடுதலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link