Type to search

Headlines

வீடு தேடிச் சென்று கணவரால் சித்திரவதையின் பின் கத்திக்குத்து

Share

குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழும் மனைவியை அவர் வேலை செய்யும் வீட்டுக்குச் தேடிச் சென்ற கணவர் சித்திவதையின்பின் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியுள்ளார்.

படுகாயமடைந்த 2 பிள்ளைகளின் தாயார் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குப்பிளான் பகுதியில் நேற்று நண்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவ தாவது,

ஊரெழுவைச் சேர்ந்த 2 பிள்ளை களின் தாயாரான 34 வயதுடைய குடும்பப் பெண் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

அவர் குப்பிளான் பகுதியில் வீடொன்றில் முதியவரை பராமரிக்கும் வேலையில் வாழ்வாதாரத்துக்காக ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் குறித்த பெண் பணி புரியும் வீட்டில் முதியவர் சுன்னாகம் பகுதிக்குச் சென்றிருந்த நிலையில் அந்தப் பெண் மட்டும் வீட்டில் தனித்து இருந்துள்ளார்.

அதன் போது அங்கு சென்ற கணவர் மனைவியின் தலைமுடியை வெட்டி எறிந்து முகத்தில் கத்தியால் கீறி சித்திரவதை செய்துள்ளார்.

அத்தோடு கத்தியால் வெட்டியும் உள்ளார். சம்பவத்தில் குடும்பப் பெண் அதிகளவு குருதி வெளியேறி அவதிப்பட்ட நிலையில் அயலவர்களால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார் அந்தப் பெண்னை வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டில் அவரது கணவரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link