விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க அரசு தீர்மானம்
Share
இலங்கைக்கான விமான சேவைகளை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மீண்டும் ஆரம் பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
எனினும் நாட்டுக்குள் வரும் சகல பயணிகளையும் பரிசோதனை செய்யும் விசேட வேலைத் திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விமான சேவைகளை வழமைக்கு கொண்டு வருவது குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், “விமான நிலையங்கள் மூடப் பட்டுள்ளமையினால், நாட்டுக்கு கிடைக்க விருந்த மிகப்பெரிய வருமானம் இல்லாது போயுள்ளது.
குறிப்பாக சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.