வவுனியாவில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
Share
வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண் ஒரு வருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட வவுனியா பம்பைமடுவைச் சேர்ந்த பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவரிடம் பெறப்பட்ட மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.