வடமராட்சியில் வாள்வெட்டு; முதியவர் படுகாயம்
Share

வடமராட்சி, வல்லிபுரம் குறிச்சி யில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று மதியம் வீடு புகுந்த ரௌடிக்குழுவொன்று வீட்டுக் கும், உடைமைகளிற்கும் சேதம் ஏற்படுத்திவிட்டு, முதியவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றது.
இவ்வாறு படுகாயமடைந்தவர் சிங்கை நகர் வல்லிபுரம் குறிச்சியைச் சேர்ந்த சின்னத்துரை துரைராசா (வயது-68) என்பவராவார்.
படுகாயமடைந்த முதியவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.