ரிஷாட் பதியூதீனை கைது செய்ய பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவிப்பு
Share
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை நீதிமன்றப் பிடியாணை பெற்று கைது செய்யு மாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க போக்கு வரத்துச் சபையின் பேருந்து களில் இடம்பெயர்ந் தோரை அழைத்துச் சென்றதன் அடிப்படையில் பொது நிதி களை குற்றவியல் முறையில் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தேர்தல் சட்டங்களை மீறுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ரிஷாட் பதியூதீனை கைது செய்ய சட்ட மா அதிபர் பணித்துள்ளார்.
2019 நவம்பர் 17 ஜனாதிபதித் தேர் தலின் போது புத்தளம் மாவட்டத்திலிருந்து வாக்காளர்களை இ.போ.ச. பேருந்தில் மன்னாருக்கு அழைத்து வந்து வாக்களிக்க அப்போதைய அமைச்சர் ரிஷாட் பதியூதீன் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.