Type to search

Headlines

யாழ்.பல்கலைக்கழக மாணவர் களிடம் இணையவழி பாலியல் பகிடிவதை

Share

யாழ்ப்பாண பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது இணையவழியில் பாலியல் ரீதியில் மிக மோசமான பகிடிவதை நடைபெறுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“இரண்டு சிரேஷ்ட மாணவர்களும் இரண்டு சிரேஷ்ட மாணவிகளும் இந்த மோசமான பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர். வட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடகங்களின் வழியாக நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சுயஇன்பம் செய்யும் காட்சிகளை அனுப்புமாறு கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

அவர்களின் கட்டளைக்கு செவிசாய்க்க மறுத்தவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வரும்போது கடுமையான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

3ஆம், 4ஆம் ஆண்டு மாணவர் களான இந்த பகிடிவதைக் குழு, கிட்டத் தட்ட 120 புதுமுக மாணவர்களை பகிடி வதைக்கு உள்ளாக்கியுள்ளனர். அவர் களின் மிரட்டலிற்கு அஞ்சிய புதுமுக மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இதுபோன்ற படங்களை அவர்களிற்கு அனுப்பியுள்ளனர்.

கொரோனா தொற்றையடுத்து முடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னர் பெரும்பாலான விரிவுரைகள் இணையவழியாக நடத்தப் பட்டன. இந்த காலகட்டத்தில் இந்தவகை யான இணையவழி பகிடிவதை தொடங் கியது என்றும் அந்தச் செய்தியில் தெரி விக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலருக்கு சமூக வலைத் தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது எனக் கூறப்படும் பகிடிவதை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர் ஹெக லிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நேற்று அரச தகவல் திணைக்களத் தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங் களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப் பின்போது, இந்த விடயம் தொடர்பாக ஊடக வியலாளர் ஒருவர் அமைச்சரவைப் பேச் சாளரிடம் கேள்வி எழுப்பினார்.

இந்த விடயம் தொடர்பாக தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளர் பதிலளித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link