மேலும் 35 படையினருக்கு கொரோனா தொற்று உறுதி
Share
மேல் மாகாணம் வெலிசர கடற்படை முகாமில் மேலும் 35 கடற்படைச் சிப்பாய்களுக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 417 (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உட்பட) அதிகரித்துள்ளது.
அத்துடன் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த 65 கடற்படையினர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.