Type to search

Headlines

மாவீரர் நாளை அனுஷ்டிக்க அனுமதி தேவையில்லை

Share

மாவீரர் நாள் நினைவேந் தலை அனுஷ்டிக்க நாம் யாரிட மும் அனுமதிபெறத் தேவை யில்லை என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜி லிங்கம் தெரிவித்துள் ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை நினைவுகூருவதனை யாரும் தடுக்க முடியாது.

அதேபோல எமது குடும்ப உறுப் பினர்களை நினைவுகூருவதற்கு நாம் யாரிடமும் அனுமதியும் பெறத் தேவையில்லை.

எனவே மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு வழமைபோல் இடம்பெறும். எத்தடைவரினும் அத்தடையை உடைத்து மக்கள் அனைவரும் தற்போதைய சூழ் நிலைக்கு ஏற்ப ஒன்றுகூடி இந்த மாவீரர் தின நிகழ்வை நடத்துவோம்.

எம்மைக் கைது செய்தால் கைது செய்யட்டும். ஆனால் மாவீரர் நாள் நிகழ்வை நடத்துவோம்” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link