Type to search

Headlines

மரம் சரிந்து விழுந்ததில் வீதியால் சென்ற இருவர் பலி

Share

முல்லைத்தீவு சிலாவத்தைப் பகுதியில் வீதியால் உந்துருளியில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மரம் சரிந்து விழுந்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை மற்றும் ஒரு இளைஞனும் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்,

முல்லைத்தீவு நகரை அண்டிய பகுதிகளில் நேற்று மாலை வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக உந்துருளி ஒன்றில் வீதியால் பயணித்தவர்கள் மேல், சிலாவத்தை பகுதியில் மரம் ஒன்றின் கிளை ஒன்று சரிந்து விழுந்துள்ளது

இதன்போது 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான கொக்குத் தொடுவாய் மேற்கினைச் சேர்ந்த இ.ஜெம்சி விகேந்திரன் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதுடன் நீராவிப்பிட்டியினை சேர்ந்த 21 வயதுடைய எட்வேட் எமில்டன் என்ற இளைஞன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link