Type to search

Headlines

மனைவி 4 மாத கர்ப்பிணி; கணவன் சடலமாக மீட்பு

Share

கூமாங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட இரண்டாம் குறுக்குத்தெரு வீதியில் இளம் குடும்பஸ்தரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

நேற்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

22 வயதுடைய ரஞ்சித் வசந் என்ற இளைஞன் திருமணம் முடித்து மனைவியுடன் கூமாங்குளம் இரண்டாம் ஒழுங்கை பகுதியில் வசித்து வருகின்றார்.

குறித்த இளைஞனின் மனைவி நான்கு மாத கர்ப்பிணியாக காணப்படுவதினால் குறித்த பெண் நேற்றுக்காலை நெடுங் கேணி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் தனிமையில் குறித்த இளைஞன் இருந்துள்ளார்.

மாலை 5.00 மணியளவில் இளைஞனின் சகோதரன் வீட்டுக்கு சென்று பார்வையிட்ட சமயத்தில் இளைஞர் சடலமாக காணப்பட்டதினை அவதானித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பண்டாரிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link