Type to search

Headlines

மட்டுப்படுத்தப்பட்ட தனியார் போக்குவரத்துச் சேவைகள் வடக்கில் இன்று முதல் ஆரம்பம்

Share

வட மாகாணத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் போக்குவரத்து சேவைகள் இன்றிலிருந்து சேவையில் ஈடுபடவுள்ளதாக வட இலங்கை தனியார் பேருந்து உரிமை யாளர்சங்கத் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக போக்கு வரத்துச் சேவைகள் யாவும் தடைப்பட்டிருந்த பின்னர் இன்றையதினம் மட்டுப் படுத்தப்பட்ட அளவில் குறித்த பேருந்து சேவையினை மாகாணத்துக்கு உட்பட்டு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார நடைமுறையினை பின்பற்றி ஆசன இருக்கைகளிற்கு அமைவாக குறித்த பயண சேவைகள் யாவும் இன்றைய தினத்தில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற உள்ளதாகவும் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பேருந்தில் பயணம் செய்யும் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அதாவது கைகளுக்கு கையுறைகளை அணிந்து முகக்கவசங்களை கட்டாய மாக அணிந்து குறித்த சுகாதார நடைமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link