பொதுத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது
Share

எமக்காகத் தம்மை அர்ப்பணித்தவர்களின் பெயரால் உண்மையாகவும் ஒற்றுமை உணர்வுடனும் நேர்மையாகவும் தூய அரசியலை முன்னெடுத்து எமது நிலைப்பாடுகளை அஞ்சாது வலியுறுத்தி முன்னேறக் கூடியவர்களை எமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்வோம்.
எமக்கு தற்காலிகமாக வழங்கப்படும் சலுகைகளுக்காகவும் இலஞ்சத்திற்காகவும் எமது கடமையிலிருந்து விலகி விட முடியாது என்று தமிழ் மக்கள் பேரவை சுட்டிக் காட்டியுள்ளது.
பொதுத் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை நேற்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையால் வெளியிடப்பட்டுள்ள முழுமையான அறிக்கை நாளை (28) வலம்புரியில் வெளியாகும்.