Type to search

Headlines

பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி வகிக்க முடியாது

Share

முப்படைகளின் தளபதி என்ற வகையில் நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவரான ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கும் உரிமை 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் பதவியை வகிக்கும்போது நேரடியாக செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத காரணத்தினால் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சிறந்த உதாரணம்.

பாதுகாப்பு அமைச்சராக நேரடியாக செயற்பட முடியாத காரணத்தினால் இந்த தாக்குதல் நடந்தது.

ஜனாதிபதிக்கு மேல் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆணைக்குழுக்களுக்கே அதிகாரம் உள்ளது.

ஆணைக்குழுக்களுக்கு அதி காரம் கிடைத்துள்ளமை 19ஆவது திருத்தச் சட்டத்தில் நடந்த மிகவும் பயங்கரமான நிலைமை.

இது சம்பந்தமான புரிதல் இல்லாத சிலர் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்குவது மிகப் பெரிய தவறு என்று கருதுகின்றனர் எனவும் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதி எந்த அமைச்சுப் பதவிகளையும் வகிக்க முடியாது என்றாலும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொறுப்பின் கீழேயே பாதுகாப்பு அமைச்சு செயற்பட்டு வருகிறது.

இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயல் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் பாராளுமன்றத்தில் சுட்டிக் காட்டியிருந்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link