Type to search

Headlines

பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து மீட்டதுபோலபோதைப்பொருளிலிருந்தும் நாட்டை மீட்டெடுப்பேன்

Share

போதைப்பொருள் அற்ற நாடொன்றை எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதாக ஜனாதி பதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தார்.

பல்வேறு வழிகளில் போதைப் பொருளை நாட்டிற்குள் கொண்டு வருதல்,

விநியோகித்தலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்ததுபோல் போதைப்பொருளில் இருந்தும் நாட்டை மீட்டெடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் நேற்று கம்பஹா மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, கிரிபத் கொட பொது வணிக வளாகத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வேட்பாளர் பிரசன்ன ரணவீர இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். இம்மக்கள் சந்திப் பில் பங்குபற்றிய பேராசிரியர் சங்கைக்குரிய கும்புறு கமுவே வஜிர தேரர் உள்ளிட்ட மகாசங் கத்தினர் ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link