பத்திரிகை விளம்பரத்தை பார்த்து கோபமடைந்த பிரதமர் மகிந்த
Share
“கொரோனா உங்களை அணுகாது” என்ற தலைப்பில் யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகை யொன்று விளம்பரம் ஒன்றை கடந்த 15ஆம் திகதி பிரசுரித்திருந்தது.
இதனைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய பிரதமர் மகிந்த இப்படி பொறுப்பற்ற விதத்தில் விளம்பரம் பிரசுரித்ததற்கு தனது கண்டனத்தை வெளியிட்டார்.
கட்சித் தலைவர்கள் கூட்டமானது நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்தது. இதில் வைத்தே குறித்த விளம்பரம் தொடர்பில் பிரதமர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கிறிஸ்தவ மதபோதனை ஒன்று தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகையொன்று விளம்பரம் செய்துள்ளது
.
“கொரோனா உங்களை நெருங்காது” என்ற அந்த விளம்பரத்தில் இலக்கம் – 14 ராசாவத்தை, சுதுமலை வீதி, மானிப்பாய் பகுதியில் இடம்பெறும் ஜெபக்கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதமர் கூறுகையில்,
நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எனது கைகளில் இந்த விளம்பரம் கிடைத்தது.
ஜெபக்கூட்டம் ஒன்றுக்கு வருமாறு கூறப்பட்டுள்ளது.
வடக்கில் பத்திரிகைகளில் இப்படியான விளம்பரங்களை வெளியிட அனுமதிக்க வேண்டாம் என்றார்.