Type to search

Headlines

நெதர்லாந்து தூதுவருடன் பிரதமர் மகிந்த சந்திப்பு

Share

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் தன்ஞா கோன்க் ரீட்ஜூக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்று கொழும்பில் நடை பெற்றுள்ளது.

பொதுத் தேர்தல் வெற்றி மற்றும் கொரோனா நோய்ப் பரவல் தடுப்புத் தொடர்பில் அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நெதர்லாந்து தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அண்மையில் இலங்கைக் கடற்பரப்பில் தீ விபத்துக்கு இலக்கான நியூ டயமன்ட் கப்பலில் கடமையாற்றிய நெதர்லாந்து நிபுணர்கள் தொடர்பில் பிரதமர் மகிந்த, நெதர்லாந்து தூதுவருடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளார்.

கடல்சார் நிபுணர்களுக்கு இடையில் பயிற்சிகளை நடத்துவதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மகிந்த இந்த சந்திப்பின் போது வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link