நெக்குருக வைத்த முள்ளிவாய்க் கால் நினைவேந்தல்
Share

அரச படைத்தரப்பால் ஏற்படுத்தப்பட்ட தடைகளைத் தகர்த்தெறிந்து உணர் வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றது.
பொது மக்கள் பங்கு பற்றி இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமது அஞ்சலியை தெரிவித்தனர்.
இறுதி யுத்தத்தின்போது உயிர் நீத்த தமிழ் மக்களின் 11ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் நேற்று இடம்பெற்றுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வின் பிரதான பொதுச்சுடர் காலை 10 மணிக்கு ஏற்றி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கொள்கைப் பிரகடன அறிக்கை வெளியிட்டப்பட்டதுடன், மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
உறவுகளை இழந்தவர்கள் முள்ளி வாய்க்கால் மண்ணில் கண்ணீர் விட்டும் கதறியும் அழுது தமது ஆற்ற முடியாத் துயரை வெளிப்படுத்தினர்.
நேற்றைய நினைவேந்தல் நிகழ்வு குறித்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டிருந்ததாக ஏற்பாட்டுக் குழுவினர் முன்னரே அறி வித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நினைவேந்தல் நிகழ்வில் சமூக இடைவெளி பின் பற்றப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.